ஜம்மு காஷ்மீரில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ! நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி நாசம்!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான காட்டுத்தீ பரவி வருகிறது. இந்தத் தீயில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ தொடர்ந்து பரவி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நீண்ட நாட்களாக நிலவும் வறண்ட வானிலை மற்றும் மழை இல்லாத சூழல் காரணமாக காட்டுத்தீ உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பலத்த காற்று வீசுவதால் தீ அருகிலுள்ள மலைக் கிராமங்களை நோக்கியும் வேகமாகப் பரவி வருகிறது. செங்குத்தான மலைப்பகுதிகளில் தீ பரவியுள்ளதால், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் கடுமையான சவால்கள் நீடித்து வருகின்றன.




கருத்துகள் (0)