ஐ.ஏ.எஸ். ஆக விரும்புகிறீர்களா? யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் வாய்ப்புகள்!

இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) உள்ளிட்ட குடிமைப் பணிகளில் சேர விரும்புவோர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 32 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.) 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. தேர்வு எழுதும் வாய்ப்புகளைப் பொறுத்தவரை பொதுப்பிரிவினருக்கு 6 முறையும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 9 முறையும் அனுமதி வழங்கப்படுகிறது.




கருத்துகள் (0)