செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

சவுதி அரேபியாவுக்கான இண்டிகோ விமானங்கள் அக்.17 வரை ரத்து! பயணிகள் அவதி!

சவுதி அரேபியாவுக்கான இண்டிகோ விமானங்கள் அக்.17 வரை ரத்து! பயணிகள் அவதி!

 

 

ஈரான்–சவுதி அரேபியா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ரியாத், ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும், அங்கிருந்து புறப்படும் விமானங்களும் அக்.17 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நடவடிக்கையால் சவுதி அரேபியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமானப் பயணத்தை முன்பதிவு செய்தவர்கள் தங்களது பயண விவரங்கள், விமானத்தின் தற்போதைய நிலை மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.