புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
உலகம்

சவூதியில் இலங்கைத் தமிழரின் மரண தண்டனை ரத்து!

சவூதியில் இலங்கைத் தமிழரின் மரண தண்டனை ரத்து!

 

 

சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

 

அனோஜன் தரப்பில், தொழில்நுட்பக் கோளாறு அல்லது சமூக வலைத்தளக் கணக்கு ஊடுருவப்பட்டதன் காரணமாக அந்தப் பதிவு ஏற்பட்டிருக்கலாம் என வாதிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இலங்கைத் தூதரகம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சட்டரீதியான உதவிகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.