ஹர்திக் பாண்டியா மும்பை அணியிலிருந்து வெளியேறுகிறாரா? கொல்கத்தாவுடன் தீவிரமாகும் வீரர்கள் பரிமாற்றப் பேச்சுவார்த்தை!

ஐபிஎல் அடுத்த சீசனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை அணியின் தற்போதைய கேப்டனான ஹர்திக் பாண்டியாவை கொல்கத்தா அணிக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிமாற்றத்திற்கு ஈடாக கொல்கத்தா அணியில் விளையாடி வரும் இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா ஆகிய இருவரையும் மும்பை அணி தனது அணியில் சேர்க்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், கொல்கத்தா அணியின் முக்கிய வீரர்களாகக் கருதப்படும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஹர்சித் ராணாவை விடுவிக்க அந்த அணி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. வீரர்களைப் பரிமாறிக்கொள்வது தொடர்பாக இரு தரப்பும் இறுதி முடிவுக்கு வராத நிலையில், அடுத்தகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த மாற்றம் குறித்த தெளிவான முடிவு தெரியவரும். இதனால் ஹர்திக் பாண்டியா அடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியிலேயே தொடர்வாரா அல்லது கொல்கத்தா அணிக்கு மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




கருத்துகள் (0)