சிமெண்ட் மூட்டை விலை ரூ.15 வரை உயர வாய்ப்பு! வீடு கட்டுவோருக்கு அதிர்ச்சி!

நிலக்கரி மற்றும் பிற எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக எம்.கே. ரிசர்ச் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த பருவமழை காரணமாக கட்டுமானப் பணிகள் மந்தமடைந்ததுடன், சிமெண்ட் விலையும் குறைந்ததால் உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைச் சமாளிக்க சிமெண்ட் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் சிமெண்ட் விற்பனை அளவு 7 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால், வீடு கட்டுவோர் மற்றும் கட்டுமானத் துறையினரின் செலவுகள் அதிகரிக்கலாம்.




கருத்துகள் (0)