ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 26-ல் தீர்ப்பு!

கடந்த 2018ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு அக்டோபர் 26ஆம் தேதி வழங்கப்படும் என கூடுதல் சிவில் நீதிபதி சுபம் வர்மா அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் நீதிமன்றம் அளிக்கவுள்ள தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)