இந்திய ராணுவத்தில் 90 அதிகாரி பணியிடங்கள்! பிளஸ் 2 முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு – நவ.12 கடைசி நாள்!

இந்திய ராணுவத்தின் 10+2 தொழில்நுட்பப் பிரிவின் (TES-57) கீழ் காலியாக உள்ள 90 இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வாய்ப்புக்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஜேஇஇ தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நான்கு ஆண்டுகள் இலவசத் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு ராணுவத்தில் லெப்டினன்ட் பதவி வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.in வாயிலாக வரும் நவம்பர் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




கருத்துகள் (0)