செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கடலூரில் 50 ஆயிரம் கறிக்கோழிகள் உயிரிழப்பு; பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என அமைச்சர் விளக்கம்!

கடலூரில் 50 ஆயிரம் கறிக்கோழிகள் உயிரிழப்பு; பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என அமைச்சர் விளக்கம்!

கடலூர் மாவட்டம் தம்மனாம்பேட்டை பகுதியில் உள்ள கறிக்கோழி பண்ணைகளில் சுமார் 50 ஆயிரம் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பல்வேறு கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, கோழிகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தில் ஏதேனும் நச்சுத்தன்மை கலந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதற்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுவதாக கால்நடைத் துறை அமைச்சர் கமலி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்களும், கோழிப்பண்ணை உரிமையாளர்களும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், அதிகாரிகள் வழங்கும் முன்னெச்சரிக்கை அறிவுரைகளை முறையாகப் பின்பற்றி ஆய்வுப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.