டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பது ஏன்? தமிழக அரசு விளக்கம்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் கடைகளின் பராமரிப்புக்கான நிதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தவெக அரசு வழங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மதுபானக் கடைகளில் வாடிக்கையாளர்களிடம் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட கூடுதலாகப் பணம் வசூலிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே MRP விலையுடன் ரூ.10 சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.
ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள நிலையிலும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சில பணியாளர்கள் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக சிலர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)