வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
இந்தியா

BLM நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை.. ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்; சொகுசு கார்கள், தங்க நகைகள் பறிமுதல்!

BLM நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை.. ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்; சொகுசு கார்கள், தங்க நகைகள் பறிமுதல்!

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் BLM நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.103 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் தொழிலதிபர் பிரேம் குமாருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவருடன் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

இந்த சோதனையின்போது, சுமார் ரூ.7 கோடி மதிப்புடைய 8 சொகுசு கார்கள் மற்றும் ரூ.9.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்டவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் சொத்துகள் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.