பெண்களுக்கு ‘கவரிங் செயின்’ திட்டமா? முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்!

தமிழகம் முழுவதும் பெண்களைக் குறிவைத்து தாலிச் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக ஐடி விங், பெண்கள் தங்களது தங்க நகைகளை வங்கிகளிலோ அல்லது வீட்டிலோ பாதுகாப்பாக வைத்துக்கொள்வதே நல்லது என காட்டமாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பும் வகையில் இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே அரசு செவிலியர் ஒருவரிடம் 18 சவரன் மதிப்புள்ள தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவத்தை மேற்கோள் காட்டி, திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதாக முதலமைச்சரை விமர்சித்துள்ள அந்தப் பதிவு, அனைத்துப் பெண்களுக்கும் ‘தாய்மாமன் கவரிங் செயின் திட்டம்’ ஒன்றைத் தொடங்கலாம் என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளது.




கருத்துகள் (0)