ராஜஸ்தானில் முன்னாள் பாஜக எம்எல்ஏ அடித்துக் கொலை! கிராம மக்களுடன் மோதலில் பரபரப்பு!

ராஜஸ்தானின் பவுண்டா கிராமத்தில் முன்னாள் பாஜக எம்எல்ஏ அத்தார் சிங், கிராம மக்களுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத சுரங்கப் பணிகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மூடப்பட்டிருந்த கல் உடைக்கும் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தப் பிரச்சினை உருவானதாகத் தெரிகிறது.
ஆலையை மீண்டும் திறப்பது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களை அத்தார் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் வெளியேற்ற முயன்றபோது மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அத்தார் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)