வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால் காதலியை 1,000 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற காதலன்!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், 23 வயது இளம்பெண் ஒருவர் சுமார் 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீபாத் வதார் (25) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் உறவில் ஏற்பட்ட பிரச்சினையும், அந்த இளம்பெண்ணுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி வேறொருவருடன் திருமணம் நடைபெறவிருந்ததும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாயக்வாடி நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் இருந்து இளம்பெண்ணின் உடலை மீட்ட போலீசார், சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)