செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

2027 உலகக்கோப்பை கிரிக்கெட்: 12 நாட்களில் 1.5 கோடி டிக்கெட் விண்ணப்பங்கள்!

2027 உலகக்கோப்பை கிரிக்கெட்: 12 நாட்களில் 1.5 கோடி டிக்கெட் விண்ணப்பங்கள்!

 

 

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடருக்கான டிக்கெட் குலுக்கல் முறையில், விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இந்த நடைமுறை தொடங்கிய 12 நாட்களிலேயே 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது.

 

உலகின் 142 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் ஐசிசி வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள இந்த வரவேற்பு, போட்டிகளைக் காண்பதற்கான ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.