புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: 275 பேர் கொண்ட இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: 275 பேர் கொண்ட இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி!

 

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க 275 பேர் கொண்ட அணிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அணியில் 111 வீரர்கள், 55 வீராங்கனைகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் அணியில் இணைந்துள்ளனர். இந்திய வீரர்கள் மொத்தம் 10 விளையாட்டுப் பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

 

இந்திய அணியில் தடகள உலக சாம்பியன் சிம்ரன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பட்டேல், வில்வித்தை வீராங்கனைகள் ஷீத்தல் தேவி, பயால் நாக் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனைகள் மனிஷா, நித்யா, துளசிமதியும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.