போதைப்பொருள் கொடுத்து இளம்பெண்ணிடம் அத்துமீறல் புகார்.. அபுதாபியில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட கேரள இளைஞர்!

டெல்லியில் 20 வயதுடைய இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக, கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சஜீர் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, புகாரில் குற்றம் சாட்டப்பட்ட சஜீர் இந்தியாவிலிருந்து வெளியேறி அபுதாபியில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்டர்போல் அமைப்பின் ஒத்துழைப்புடன் அவரைப் பிடித்த டெல்லி காவல்துறையினர், இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து, அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)