ஓசூர் தொழிற்சாலையில் பயங்கர விபத்து.. கதவு சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வரும் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது. ஆலையின் நுழைவாயிலுக்கான கதவு அமைக்கும் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அந்தக் கதவு சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய 3 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொழிற்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)