ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 78 அரசு வேலைவாய்ப்புகள் – 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி!

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) சார்பில், மாவட்ட சுகாதார அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வித் தகுதி பெற்றவர்கள் வரை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ப மாதம் ரூ.11,000 முதல் ரூ.63,000 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 78
பணியிடம்: ஈரோடு மாவட்டம்
விண்ணப்ப தொடக்க தேதி: 27.10.2026
கடைசி தேதி: 12.11.2026 மாலை 5 மணி
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு முறை: நேர்காணல்
காலிப்பணியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்
1. Medical Officer (HWC) – 2 இடங்கள் – ரூ.63,000
-
MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
-
வயது 40-க்குள் இருக்க வேண்டும்.
2. Tuberculosis Health Visitor (NTEP) – 1 இடம் – ரூ.15,000
-
அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு அல்லது அறிவியல் பிரிவில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் MPW, LHV, ANM அல்லது Health Worker சான்றிதழ் பெற்ற அனுபவம் இருக்க வேண்டும்.
-
Health Education / Counselling தொடர்பான உயர் படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட TB Health Visitor பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
-
குறைந்தது 2 மாத கணினி இயக்கப் பயிற்சி சான்றிதழ் அவசியம்.
3. Lab Technician (NTEP) – 3 இடங்கள் – ரூ.17,000
-
12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory Technology பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
-
NTEP அல்லது Sputum Smear Microscopy பிரிவில் ஓராண்டு அனுபவம் அவசியம்.
-
கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. Senior Treatment Supervisor (STS) – 1 இடம் – ரூ.23,000
-
பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட Sanitary Inspector / Tuberculosis Health Visitor படிப்பு அல்லது Social Work / Medical Social Work பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
-
Multi-Purpose Health Worker அடிப்படைப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
-
குறைந்தது 2 மாத கணினிப் பயிற்சி சான்றிதழ் அவசியம்.
-
நிரந்தர இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமமும் வாகனம் ஓட்டும் திறனும் வேண்டும்.
5. Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) – 1 இடம் – ரூ.23,000
-
பட்டப்படிப்பு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் DMLT அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
-
நிரந்தர இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.
-
குறைந்தது 2 மாத கணினிப் பயிற்சி சான்றிதழ் மற்றும் RNTCP பிரிவில் ஓராண்டு அனுபவம் வேண்டும்.
6. Counsellor (ICTC) – 2 இடங்கள் – ரூ.21,000
-
Psychology / Social Work / Sociology / Anthropology / Human Development ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Nursing டிப்ளமோவுடன் HIV/AIDS துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
-
HIV/AIDS பாதிக்கப்பட்ட அல்லது பாதிப்புக்குள்ளான சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது Nursing டிப்ளமோவுடன் ஓராண்டு அனுபவம் இருந்தால் போதுமானது.
7. Lab Technician (ICTC) – 3 இடங்கள் – ரூ.17,000
-
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் DMLT படித்திருக்க வேண்டும்.
-
DMLT இல்லாதவர்கள் Medical Laboratory Technology சான்றிதழ் படிப்பை முடித்து, ICTC பிரிவில் 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றிருந்தால் பரிசீலிக்கப்படலாம்.
8. Refrigeration Mechanic – 1 இடம் – ரூ.24,000
-
Refrigeration Mechanic & Air-Conditioning பிரிவில் ITI சான்றிதழ் மற்றும் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.
9. Security Guard – 1 இடம் – ரூ.11,000
-
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
10. Data Entry Operator – 1 இடம் – ரூ.17,500
-
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
-
ஓராண்டு Computer Application டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
-
ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் வேண்டும்.
-
வயது 40-க்குள் இருக்க வேண்டும்.
11. Mid-Level Health Provider – 7 இடங்கள் – ரூ.21,000
-
GNM டிப்ளமோ அல்லது B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
-
வயது 50-க்குள் இருக்க வேண்டும்.
12. Health Inspector (MTM) – 34 இடங்கள் – ரூ.17,500
-
உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
SSLC-யில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
-
Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector பிரிவில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
-
வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
13. Hospital Worker / Support Staff (UHWC) – 2 இடங்கள் – ரூ.11,000
-
குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
14. Multi Purpose Hospital Worker – 13 இடங்கள் – ரூ.11,000
-
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
15. Radiographer – 1 இடம் – ரூ.17,000
- B.Sc Radiography பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
16. Physiotherapist – 1 இடம் – ரூ.23,000
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BPT பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
17. MMU Driver – 1 இடம் – ரூ.17,500
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LMV ஓட்டுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
18. UPHC Pharmacist – 2 இடங்கள் – ரூ.18,000
-
அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
Diploma in Pharmacy அல்லது B.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
19. ECHO Technician – 1 இடம் – ரூ.17,000
-
Echocardiography / Echocardiography Technology / Cardiac Care Technology பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
-
தேவையான செய்முறைப் பயிற்சி அல்லது மருத்துவப் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
-
அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனங்களில் ECHO சேவையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதி
விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.11.2026 மாலை 5 மணி ஆகும்.
மருத்துவம், செவிலியர் பணி, ஆய்வகத் தொழில்நுட்பம், சுகாதாரப் பணி மற்றும் அலுவலகப் பணிகளில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளைச் சரிபார்த்துக் கொள்ளவும்.




கருத்துகள் (0)