சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஜனவரி 21 முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை: கள் இயக்கம் அறிவிப்பு!

ஜனவரி 21 முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை: கள் இயக்கம் அறிவிப்பு!

 

 

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 21ஆம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

மேலும், தமிழக முதல்வர் கள் இறக்குவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட நல்லசாமி, அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து கள் மீதான தடையை நீக்க வேண்டும் அல்லது அந்தத் தடை நியாயமானது என்பதை நீதிமன்றத்தில் வாதிட்டு நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இல்லையெனில், முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் கூறினார். கள் விற்பனை தொடர்பான இந்த அறிவிப்பு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.