ஜெம் வீரமணியிடம் இன்றும் விசாரணை: சிறையிலேயே தொடரும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை!

10 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், ஜெம் வீரமணி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கூடுதலாக இரண்டு நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சிறையிலேயே வீரமணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், விசாரணையின் தொடர்ச்சியாக இன்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சிறுமிகள் அளித்த புகார்கள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




கருத்துகள் (0)