ஜார்கண்டில் அடுத்தடுத்து விபத்து.. பொதுமக்கள் மீது லாரி மோதியதில் 7 பேர் பலி!

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. கர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று ஸ்கூட்டி ஒன்று விபத்துக்குள்ளானது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காக சாலையோரம் திரண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த லாரி, அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே இடத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த விபத்துகள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)