சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
அரசியல்

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

 

 

திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது திமுகவுக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.