புனே கோயிலில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை புகார்: பாதுகாவலர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கோயில் ஒன்றில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. சிறுமி கூச்சலிட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட கோயில் பாதுகாவலர் விஷால் சிங் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)