செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய கட்டண விதிகள்! டிசம்பர் 1 முதல் அமல்!

SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய கட்டண விதிகள்! டிசம்பர் 1 முதல் அமல்!

SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவோருக்கு எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் தொடர்பாக புதிய கட்டண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இதன்படி, ஒரு பில்லிங் சுழற்சியில் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.50,000-க்கும் அதிகமாகப் பரிவர்த்தனை செய்தால், அதற்கான மொத்தத் தொகையில் 1 சதவீதம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

அதேபோல், ஒரு பில்லிங் சுழற்சியில் போக்குவரத்துச் சேவைகளுக்காக ரூ.30,000-ஐத் தாண்டி செலவு செய்தாலும், அந்தப் பரிவர்த்தனைத் தொகையில் 1 சதவீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் கட்டணத்தால் ஏற்படும் செலவுகளைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளையும் பில்லிங் சுழற்சியில் மேற்கொள்ளும் மொத்தச் செலவுகளையும் கவனமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.