தீபாவளியால் களைகட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனை.. கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.400-க்கு விற்பனை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரின் அடையாளமாக விளங்கும் புகழ்பெற்ற பால்கோவா, அதன் தனித்துவமான சுவை மற்றும் தரத்திற்காக புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்தத் தொழிலை நம்பி அப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பால் மற்றும் சீனையின் விலை உயர்வு காரணமாக பால்கோவாவின் உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ.40 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ பால்கோவா ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர் திருப்பதி ராஜா தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வும் விற்பனை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




கருத்துகள் (0)