வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மாரடைப்பால் காலமானார்.. 42 வயதில் உயிரிழந்ததால் எழுத்துலகினர் அதிர்ச்சி!

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மாரடைப்பால் காலமானார்.. 42 வயதில் உயிரிழந்ததால் எழுத்துலகினர் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை மற்றும் பகடி எழுத்தாளர் பிரபு தர்மராஜ் (42), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நகைச்சுவை மற்றும் பகடி எழுத்துகளின் மூலம் வாசகர்களிடையே தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்த பிரபு தர்மராஜ், 'அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புத்தகங்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து தனது எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வந்தார். 42 வயதிலேயே அவர் உயிரிழந்த செய்தி தமிழக எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.