4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை; ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 43 வயதுடைய தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழிலாளிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)