வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

முரசு புயலில் சிக்கிய 9 மீனவர்கள்.. ஓங்கோல் கடற்கரையில் 5 பேரின் உடல்கள் கரை ஒதுங்கி சோகம்!

முரசு புயலில் சிக்கிய 9 மீனவர்கள்.. ஓங்கோல் கடற்கரையில் 5 பேரின் உடல்கள் கரை ஒதுங்கி சோகம்!

முரசு புயலில் சிக்கி கடலில் மாயமான சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களில், 5 பேரின் உடல்கள் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்கி காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

இதற்கிடையே, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பது மற்றும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத 4 மீனவர்களை மீட்பதற்கான தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆலோசனை நடத்தினார். இதற்காக ஓங்கோல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மீதமுள்ள மீனவர்களைத் தேடும் பணிகளில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.