வெள்ளி, நவம்பர் 06, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என். சாலையில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த நடவடிக்கையில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவின் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர். தொழிலதிபரின் வீட்டில் அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை நடத்தி, சொத்து தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையின் முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.