தீபாவளி சொந்த ஊர் பயணம்.. தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால், சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. குறிப்பாக 7, 8 மற்றும் 9-வது நடைமேடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் இடம்பிடித்து ஏறுவதற்கு பயணிகள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், சில பயணிகள் ரயில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.




கருத்துகள் (0)